Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் செயல்பாட்டில் கேளாறு உள்ளது... அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!!

தமிழக அரசின் செயல்பாட்டில் கேளாறு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

there is a disturbance in the functioning of the tn govt says annamalai
Author
First Published Dec 11, 2022, 5:35 PM IST

தமிழக அரசின் செயல்பாட்டில் கேளாறு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தேர்தல் வர 17 மாதங்கள் உள்ளது. 400 இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார். தமிழக அரசின் செயல்பாட்டில் கேளாறு உள்ளது. தமிழகத்தில் நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு, திமுக அரசுக்கு நிர்வாக கோளாறு, மொத்தமாக அறிவாலய அரசு கோளாறு தான். எங்கு பார்த்தாலும் பிரச்சினை தான், அதனை தீர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வர், அதை தீர்ப்பது போன்று தெரியவில்லை, தமிழக முதல்வர் இன்றைக்கு அடிக்கடி பேசுக்கூடிய வார்த்தை திராவிட மாடல். இது வரை யாரும் திராவி மாடல் என்றால் என்ன என்று கேட்கவில்லை, தூங்குவது முதல் காலை எழுவது வரை திராவிட மாடல் என்று கூறி வருகிறார். தமிழகத்தினை சாரயம் ஓடும் மாநிலமாக மாற்றி, எங்கு பார்த்தலும் குடி,குடி என்று சொல்லி பெண்கள் இந்த மாநிலத்தினை வெறுக்கும் அளவிற்கு தமிழகம் குடியில் மூழ்கி இருக்கிறது. டாஸ்மாக்கில் 38 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆண்டுகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து வருகிறது. எங்கே பார்த்தலும் லஞ்சம், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியதா நிலை தான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. திமுகவின் மேடையில் அமைச்சர்கள் பேசுவதை பார்க்கும் போது அங்கு சமூக நீதி இல்லை, திமுக மேடையில் மட்டும் தான் சாதி பெயரை சொல்லி அழைக்கும் நிலை உள்ளது. பெண்களுக்கு இலவசமாக மகளிர் பேருந்து பயணம் செய்யும் திட்டத்தில் பெண்கள் 888 ரூபாய் சேமிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லஞ்சம் கொடுத்து தான் துணை வேந்தரானீர்களா.? பதவி விரும்பி பாலகுருசாமிக்கு நாவடக்கம் தேவை!கடுமையாக விளாசிய திமுக

லிப்டிக் போட்ட மாதிரி வரும் இலவச பேருந்தினை மகளிர் பயன்படுத்துவதில்லை. ஆனால் இலவச பேருந்தினை பெண்கள் பயன்படுத்தவில்லை. பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வினால் மகளிர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்தால் ஓசி பயணம் என்று அமைச்சர் ஒருவர் கூறுகிறார். 888 ரூபாய் மிஞ்சம் என்று சொல்லும் முதல்வர், பால் விலை , மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வினால் ஒவ்வொரு குடும்பம் ரூ.3500 கப்பம் கட்டுகின்றனர். வெள்ளைக்கார அரசு போல நீங்கள் இருக்கீறர்கள் மக்கள் கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் ஜனநாயகம் என்பதற்காக என்றும், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தான் மகளிர் கேட்கின்றனர். நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் தமிழக அரசு ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் விவசாயிகளிடம் கமிஷன் வசூல் செய்கிறது.கப்பம் கட்டி தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர். ஒரு பக்கம் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பார்த்து,பார்த்து செய்கிறார். மறுபக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளிடம் இருந்து புடுங்கி கொண்டு இருக்கிறார். பால் விலை உயர்வு நல்ல காமெடி பாலுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ளதாக ஒரு வாய்கோளறு அமைச்சர் கூறுகிறார். மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று முதுகெலும்பு இல்லாத அரசு கூறுகிறது. வடிவேலு கிணத்தை காணாம் என்பது போல அமைக்கப்பட்ட மரப்பாலத்தை காணாம், 1, கோடியே 20 லட்சத்தை காணாம்.

இதையும் படிங்க: பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி

அணி மட்டும் தான் உள்ளது. முதல்வரின் சொந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கால்பந்து வீராங்கனை ப்ரியா உயிரிழந்துள்ளார். பெண்களை அமைச்சர்களின் இருந்து காப்பாற்ற காவல்துறையில் சிறப்பு துறை அமைக்க வேண்டும், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள். அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீங்க என்றும், அங்கன்வாடி, பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய மூட்டை வழங்குவதில் சாதனை படைத்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன் என்றும், கீதா ஜீவனுக்கு அழுகிய முட்டை அமைச்சர் என்று பெயர் வழங்கலாம் என்றும், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் தான் சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழக்கு என்று எம்.ஜீ.ஆர் காலத்தில் தான் ஒரே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தொடங்கினால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தருவது எங்கள் பொறுப்பு தமிழகத்தில் இன்றையக்கு திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான். பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத நிலை, அதை வரும் பொங்கலுக்கு பார்க்கத்தான் போகிறார்கள் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios