துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’அம்மாவின் அதிமுக என்பது அமமுக தான், தொண்டர்கள் அமமுக பின்னால் உள்ளனர். அதை புரிந்துகொண்டு ஓபிஎஸ் அமைதி காக்க வேண்டும். திருப்பரங்குன்றம் அமமுகவின் கோட்டை. அமமுகவை பார்த்து ஈபிஎஸ் ஓபிஎஸ் பயப்படுவது ஏன்? வாக்கு பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து அமமுகவை பார்த்து திமுக அதிமுக அஞ்சுகிறது. ஈவிஎம் இயந்திரத்தை மாற்றுவதற்கான முயற்சி நடந்தாலும் அதை ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது. மகனுக்கு மட்டும் வாய்ப்பு ஓபிஎஸ் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தவர் அம்மாவிற்கு எதிராகவே தேர்தல் வேலை பார்த்தவர். 

ஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி, ஓபிஎஸ்சை நம்பி வந்தவர்களுக்கு எதையும் செய்யவில்லை. மகனுக்கு மட்டும் வாய்ப்பு வாங்கி தருகிறார். அதிமுக தொண்டன் காவி வேட்டி கட்டிகொண்டு பாஜகவோடு சேர்ந்திருப்பதை ஏற்றுகொள்ள மாட்டார்கள். ஓபிஎஸ் வாரணாசி விவகாரத்தில் ஏன் ஈபிஎஸ் பதில் அளிக்கவில்லை, பொள்ளாச்சி விவகாரத்தில் ஏன் பதில் அளிக்கவில்லை? மக்கள் புரிந்துகொண்டு அமமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே அமமுகவிற்கு ஆதரவு தருகின்றனர். 

வாக்குபதிவு முடிந்தபின் முன்னுக்குப்பின் முரணாக அதிமுக, திமுகவினர் தாங்கள் ஜெயிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து மாற்றி மாற்றி பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கோடி கோடியாக பணம் வழங்குவது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணைய அதிகாரிகளாக மாநில ஆட்சியின் அதிகாரிகளே உள்ளனர் என்பதால் நம்பகத்தன்மையை இழக்கிறது’’ என அவர் கூறினார்.