வெளிநாட்டு பைக்... கூலிங் கிளாஸ் என ஆளே மாறிப்போய் ஸ்டைலாக அசத்தி விட்டார் ஓ.பி.எஸ் மகனும், தேனி தொகுதி எம்.பி.,யுமான ஓ.பி.ரவீந்த்திரநாத்.

 

காவிரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக ஈஷா யோகாவின் சத்குரு ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்.இருசக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் துவங்கி கரூர் வழியாக திருச்சி வரை சத்குரு பயணம் மேற்கொண்டார். இந்தப் பேரணியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், அதிமுக மக்களவைத் தலைவர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இந்த விழிப்புணர்வு பயணத்தில் பங்கேற்றனர்.

 

வெள்ளை வேட்டி சட்டையில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த ஓ.பி.ரவீந்திர நாத் குமார் சூ போட்டு கூளிங் கிளாஸ் கண்ணாடி போட்டு ஸ்டைலாக வெளிநாட்டு பைக்கில் ரேஸ்  வீரரைப்போல வலம் வந்தார். கோவை மாவட்ட பதிவெண் கொண்ட அந்த பைக் அனைவரையும் ஈர்த்தது. தல தோனி இதுபோன்ற பைக்குகளில் வலம் வருவதை அதிகம் விரும்புவார். அதே போல தல அஜித்தும் இது போன்ற பைக்குகளில் அவ்வப்போது வலம் வருவார். இந்த வரில் எந்தத் தலயின் ஸ்டைலை ரவீந்திர நாத் காப்பியடித்தார் என இப்போது அதிமுகவில் பட்டிமன்றமே நடந்து வருகிறது. 

அத்தோடு சத்குரு சரத் குமார், ஓ.பி.ரவீந்திர நாத் குமார் மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதலங்களில் வலம் வருகிறது.