Asianet News TamilAsianet News Tamil

அடக் கடவுளே.. கைமீறிய ஒமைக்ரான்.. மீண்டும் ஊரடங்கு..??? அவசர அலோசணையில் மோடி..

இந்த நிலையில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்க வேண்டும் எனவும், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

O God .. Curfew again .. ??? Modi in emergency Discussion ..
Author
Chennai, First Published Dec 23, 2021, 11:22 AM IST

ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் தமிழக தலைமைச் செயலாளரும் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனும் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த உலகமும் திண்டாடி வருகிறது. தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்றும் என்ற முனைப்பில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இதை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, தடுப்பூசிகள் உயிர்காக்கும் நிவாரணியாக இருந்துவருகிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

O God .. Curfew again .. ??? Modi in emergency Discussion ..

ஆனாலும் கொரோனா வைரஸ் என்பதே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் நீங்க முடியாது அரக்கனாக மாறியுள்ளது. குரலை என்பதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது, அதனுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதேநேரத்தில் கொரோனா வைரஸ் அடிக்கடி பிழவுகளுடன் உருமாறி வருகிறது. கொரோனா என்பது டெல்டா வைரஸ் ஆக உருமாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது முதல் அலையில் இருந்து இரண்டாவது அலையாக உருவெடுத்தது. தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு டெல்டா வகை வைரஸ் அதிக பிறழ்வுகளுடன் உருமாறியுள்ளது. இதுவோ ஒமைக்ரான் வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டது. இது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஓமைக்கிரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எனவே மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஓமைக்கிரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

O God .. Curfew again .. ??? Modi in emergency Discussion ..

இருப்பினும், தமிழகத்தில் இதுவரை 34 நபர்களுக்கு ஓமைக்கிரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் 26 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நபர்கள், மதுரை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்க வேண்டும் எனவும், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் குறித்தும் அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த உயரதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவிப்பார் கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios