தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை, பருப்பு, சத்துமாவு விநியோகித்துவரும் கிறிஸ்டி நிறுவனத்தில், இரண்டு நாட்களாக நடைபெற்ற  வருமான வரித் துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை,பருப்பு , மசால் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கிறிஸ்டி ஃபிரைடுகிராம் எனும் நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இப்பொருட்களை விறியோகம் செய்து வருகிறது. சத்துணவுத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கிறிஸ்டி நிறுவனத்துக்குக் கிடைத்ததில், சுமார் 120 கோடி ரூபாய்க்குமேல் கைமாறியதாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து, வியாழன் காலை முதல் கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் சென்னை, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் சிலபகுதிகள் உட்பட 76 இடங்களில் வருமான வரித்துதறை சோதனை நடை பெற்றது. 

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி, நேற்று சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே போன்று குமாரசாமியின்  நண்பர் ஜெயப்பிரகாஷ் நடத்தி வரும் அக்னி பில்டர்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறைசோதனை நடத்தியது.

நாமக்கல் மாவட்டம் காதம்பட்டி மற்றும் கருப்பட்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. கிறிஸ்டிநிறுவனத்தின் ஆடிட்டர் ராமகிருஷ்ணன் சங்கர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின்போது, முட்டை கொள்முதலில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் கைமாறிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சத்துணவு திட்ட ஒப்பந்தம்கிடைத்ததில் சில அமைச்சர்களுக்குத் தொடர்பிருப்ப தாகவும், அவர்களும் விரைவில் வளைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.