அண்மை காலமாக நாம் தமிழர் கட்சியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி வெளியேறப் போவதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதழ் ஒன்றிலும் இருவரும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதை கல்யாண சுந்தரம் மறுத்திருந்தார். 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “அது ஒரு பேரின்ப காலம். அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் நாம் தமிழர் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்திக்கும் உரசல் இருந்து வந்த உரசல் காரணமாக அவர் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. நாம்  தமிழர் கட்சியின் சார்பில் டி.வி. விவாத நேரலை நிகழ்ச்சிகளில் ராஜீவ் காந்தி பங்கேற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.