மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ntaneet.nic.in எனும் இணைய முகவரியில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியுள்ளது.
 
15 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ படிப்பு படிக்கும் ஆர்வமுள்ளவர் எழுதிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ntaneet.nic.in எனும் இணைய முகவரியில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்

.

இந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், செப்டம்பர் 13 அன்று மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 14.37 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு எழுதினார்கள். தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் தங்கள் முடிவுகளை nta.ac.in அல்லது ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம். முடிவை சரிபார்க்க மாணவர்கள் அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரோல் எண்ணை உள்ளிட வேண்டும்.

டாக்டர் ஆக வேண்டும் என பல மாணவர்களின் கனவு என்பதால், நீட் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டவுள்ள ரிசல்ட்டை, ஒரே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் மாணவ-மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் இணயதளத்தை பார்வையிட்டதால் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.