Asianet News TamilAsianet News Tamil

இனி நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்... ஸ்டாலினை விட்டுச்சென்ற ஐபேக் பிரஷாந்த் கிஷோர்..!

மோடியை ஜெயிக்க வைத்தேன். அந்த மாநிலத்தில் வெற்றி பெற்றுத் தந்தேன்... இந்த மாநிலத்தில் தோற்கடித்தேன் என இந்தியா அரசியலின் யுக்தியை வகுத்து வருவதாக கருதப்படுபவர் ஐபேக் பிரசாந்த் கிஷோர். 

Now take care of yourself ... Prashant Kishore, the iBack who left Stalin
Author
Tamil Nadu, First Published Apr 14, 2021, 3:34 PM IST

மோடியை ஜெயிக்க வைத்தேன். அந்த மாநிலத்தில் வெற்றி பெற்றுத் தந்தேன்... இந்த மாநிலத்தில் தோற்கடித்தேன் என இந்தியா அரசியலின் யுக்தியை வகுத்து வருவதாக கருதப்படுபவர் ஐபேக் பிரசாந்த் கிஷோர்.  ஆனால், அவருக்கு அந்தளவுக்கு தகுதியில்லை. எங்கு எவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ அங்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டுக் கொள்வார் என்கிறது மாற்றுத் தரப்பு.Now take care of yourself ... Prashant Kishore, the iBack who left Stalin

தற்போதைய நிலவரப்படி  தமிழ்நாட்டில் ஸ்டாலினுடனும்,  மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடனும் சட்டப்பேரவை தேர்தலில் ஒப்பந்தம் போட்டிருந்தார். இதுநாள் வரை கட்சித் தொண்டர்களை மட்டுமே நம்பியிருந்த திமுக முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒரு ஆலோசகரை நியமித்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் 2016 தேர்தலிலேயே தற்போது அதிமுகவிற்கு வேலை பார்க்கும் சுனிலுடன் திமுக கைகோத்திருந்தது. ஆனால், அது இவ்வளவு வெளிப்படையாக அறியப்படவில்லை. கட்சிக்குள் கடும் எதிர்ப்பையும் மீறி ஐபேக் நிறுவனத்துடன் ஸ்டாலின் ஒப்பந்தம் மேற்கொண்டது.

தேர்தலுக்கு முன்பும் சரி வாக்குப்பதிவின்போதும் சரி அறிவாலயத்தை விட அதிக பரபரப்பில் இருந்தது தேனாம்பேட்டையிலுள்ள ஐபேக் நிறுவனம் தான். அடுத்தக்கட்ட நகர்வுகள், ஆட்சி அமைத்தால் யாரை அமைச்சராக்கலாம் என அனைத்தும் ஐபேக் போட்டுக்கொடுத்த பாதையில் திமுக பயணிக்கிறது. அதனால் தான் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போதே காலை, மாலை என இருமுறை விசிட் அடித்தார் ஸ்டாலின். நிலவரம் குறித்து ஆலோசனை செய்தார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் பிரசாந்த் கிஷோர் மொத்தம் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார்.Now take care of yourself ... Prashant Kishore, the iBack who left Stalin

அந்த ரிப்போர்ட்டில் 180 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை சமீபத்தில் பேட்டியளித்த பிகே உறுதியும் செய்துவிட்டார். அவர் கணக்குப்படி அனைத்து எதிர்க்கட்சிகளும் மொத்தமாகச் சேர்த்து 50 இடங்கள் மட்டுமே வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். இத்துடன் ஐபேக் நிறுவனத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டது.Now take care of yourself ... Prashant Kishore, the iBack who left Stalin

இதன் மூலம் ஐபேக்குடன் போடப்பட்ட ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. அறிவாலயத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அலுவலகத்தையும் ஐபேக் ஊழியர்கள் காலி செய்துவிட்டு குட்பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்களாம். ஐபேக் டீமுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த அலுவலகம், தற்போது கட்சியின் செய்தித் தொடர்பு நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios