தமிழகத்தில் இன்று நடைபெறும் இடைதேர்தலில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நோட்டவிற்க்கு வாக்களித்தது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், வாக்களர்களுக்கு பணம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., மரணம் அடைந்தார். இதனால், இந்த மூன்று தொகுதிகளுக்கும் இன்று மறு தேர்தல் நடக்கிறது.

இதுகுறித்து பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், மூன்று தொகுதிகளிலும் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தது மகிழ்சியளிக்கிறது. இருப்பினும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நோட்டவுக்கு வாக்களித்தது அதிர்ச்சியாக உள்ளது. இந்த தேர்தல் சுமூகமாக நடந்து முடிய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.