பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 700 கோடி ரூபாய் முறைகேடு செய்தது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோச்சி, தன்னால் விசாரணைக்கு இந்தியா வர முடியாது என தெனாவெட்டாக சிபிஐக்கு  பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12,700 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த அமாசடி அம்பலத்துக்கு வந்தபோது நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.

இந்த வங்கி மோசடியில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான  நீரவ் மோடியின் உறவினர் , மெஹுல் சோக்சியும் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து வங்கி மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மெஹுல் சோக்சிக்கு சிபிஐ இ-மெயிலில் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அளித்துள்ள மெஹுல் சோக்சி எனக்கு உடல்நிலை சரியில்லை. இப்போது தான் 6 மாதத்திற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிக தூரம் பயணிக்க முடியாது. அதோடு என் பாஸ்போர்ட் வேறு முடக்கப்பட்டுள்ளது. என்னால் இப்போதைக்கு இந்தியா வர முடியாது என அனுப்பியுள்ளார்.

மேலும் வெளிநாட்டில் தனக்கு  நிறைய வேலைகள் இருப்பதாகவும் மெஹுல் சோக்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே நீரவ் மோடிக்கு சிபிஐ அனுப்பிய நோட்டீஸ்க்கு அவரும் இதே பதிலைத்தான் தெரிவித்திருந்தார்.