Asianet News TamilAsianet News Tamil

காது கேட்கும் கருவி 10 ஆயிரம் இல்லை.. 350 தான்! கடைசியாக ஒத்துக்கொண்ட அண்ணாமலை!

பாஜகவினர் கொடுத்த காது கேட்கும் கருவி, ஆன்லைன் விற்பனைத் தளங்களில்345 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை 10 ஆயிரம் என்று சொல்வதா என்று சர்ச்சை எழுந்தது.

Not 10k hearing aids only 350 bjp Annamalai finally agreed
Author
First Published Dec 23, 2022, 3:40 PM IST

கோவை மாவட்டம், குறிச்சி பகுதியில் தமிழக பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கைக்கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.தொடர்ந்து அந்த விழாவில் பேசிய அண்ணாமலை, ‘ஒவ்வொரு மெஷினும் 10 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இது இன்று 95 பேருக்கு வழங்கப்படுகிறது’ என்று பேசியிருந்தார்.

Not 10k hearing aids only 350 bjp Annamalai finally agreed

ஆனால் ஆன்லைன் விற்பனைத் தளங்களில் இதன் விலை வெறும் 345 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இத்தனை 10 ஆயிரம் என்று சொல்வதா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று, சுந்தராபுரத்தில் 100 நபர்களுக்கு செயற்கை கால், காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்துடன் இணைந்து பாஜக வழங்கியது.  அரிமா சங்கத்தின் சார்பாக, தேசிய இயக்குனர் திரு மதனகோபால் அவர்களும் மாவட்ட ஆளுநர் திரு ராம்குமார் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க..உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி எடப்பாடி தான்.. ஓங்கி அடித்த ஓபிஎஸ் !!

செயற்கை கால்களை பாஜக  கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியது. காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர். அரிமா சங்கம் காது கேட்கும் கருவி 10000 ரூபாய் மதிப்பிலானது என்று அதன் இயக்குனர் தெரிவித்ததன் அடிப்படையில் தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது. ஜூனியர் விகடன் இதழில் இன்று, 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என்று தெரிவித்ததாக வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் நாம் விசாரித்ததில், கொடுக்கப்பட்ட காது கேட்கும் கருவிகள் 350 ரூபாய் தான் என்ற உண்மை தெரியவந்தது.

அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை தமிழக பாஜக வழங்கும். அது மட்டுமல்ல, 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும், 5000 ரூபாய் முதலீடாக பாஜக செய்யும்.

இன்று 4 குழந்தைகளின் பெயரில் செல்வமகள்/PPF கணக்குகள் தொடங்கப்பட்டு அவரவர் பெற்றோர்களின் கையில் ரசீதுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 12 குழந்தைகளுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கணக்குகள் துவங்கப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

Follow Us:
Download App:
  • android
  • ios