முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இரண்டாவது சிலை, பெரியார் பிறந்த ஈரோட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னைக்கு வருவதற்கு விமான நிலையம் வர கோவை விமானநிலையத்திற்கு வந்திருக்கிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

விமானநிலையத்திற்குள் வந்த மு.க.ஸ்டாலினை பார்த்த இரு இளைஞர் பாரத் மாதா கீ ஜே "என மது போதையில் முழக்கமிட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை சுற்றி திமுகவினர் நெருங்கியதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து போலிசார் பாதுகாப்புடன் அந்த இளைஞரை விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர். 

போலீசார் அந்த இளைஞரை விசாரித்ததில், அவர் டெல்லியை சேர்ந்தவர் என்றும், அந்த இளைஞர் பெயர் சரீஷ் ஹரி ஒம் காசியாபாத், அளவுக்கு மீறிய மது போதையில் முழக்கமிட்டுள்ளார். இவர் பெங்களூரில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொண்டு டெல்லி செல்கிறார். 

இதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக சோஃபியா என்ற பெண் 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, அப்போது, சோஃபியாவிற்கு ஆதரவாக திமுக தலைவர் முக ஸ்டாலினும் அறிக்கை விட்டிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.