தமிழக அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் வட இந்தியர் ஒருவர் மருந்தாளுனராக பணியாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாக மாறி உள்ளது.

தமிழக அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் வட இந்தியர் ஒருவர் மருந்தாளுனராக பணியாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாக மாறி உள்ளது.

தமிழ்நாடு தமிழர்களுக்கு என்ற முழக்கம் இப்போது உள்ள சூழலில் கரைந்து போய்விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் அனைத்து வேலைகளிலும் இப்போது வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு என்பது அதிகமாகி விட்டது.

ஓட்டல்கள், கட்டுமான வேலைகள் என தொடங்கி ரயில்வே, தொலைபேசி நிலையங்கள் என எங்கும் வட இந்தியர்கள் வேலையில் இருக்கும் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தொடக்கத்தில் வெகு எளிதாக கருதப்பட்ட இந்த விவகாரம் நாளடைவில் அரசியல் கட்சிகள், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள் மூலம் வெளிக்கொணரப்பட்டது.

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என்று தமிழ்நாட்டில் உள்ள வேலை தமிழர்களுக்கே என்ற முழக்கம் பரவலாக பேசப்பட்டது. இந்தி திணிப்பையும், வட இந்தியர்களையும் தமிழகத்தில் பரவலாக இடம்பெற செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒரு கட்டத்தில் இந்தி தெரியாது போடா என்று கோஷங்கள் முன் வைக்கப்பட்டு தமிழ் மீதான உணர்ச்சியை மக்கள் வெளிகாட்டிய சம்பவங்களும் நடந்தது உண்டு. கிட்டத்தட்ட அனைத்து வேலைகளிலும் புகுந்த வட இந்தியர்கள் இப்போது மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளிலும் பணியில் சேர்ந்துள்ளனர்.

மற்ற அரசு துறைகளில் பணியில் இருப்பதை மக்களும் தமிழ் தேசிய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. கொஞ்சம், கொஞ்சமாக அரசு துறைகளில் உள்ளே புகுந்த அவர்கள் இப்போது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகளிலும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்தகம் ஒன்றில் வட இந்தியர் பணியில் சேர்ந்துள்ளனர் என்ற பகீர் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அரசு ஆஸ்பத்திரி ஒன்றின் மருந்தகம் ஒன்றில் நோயாளி ஒருவர் மருந்துகள் வாங்க செல்கிறார். அப்போது உள்ளே பணியில் வட இந்தியர் ஒருவர் அமர்ந்து கொண்டு மருந்து மாத்திரைகளை எடுத்து வைத்துக் கொண்டு இந்தியில் பேசுகிறார். அது புரியாமல் அரசு மருத்துவமனையில் நீங்கள் எப்படி பணியில் சேர்ந்தீர்கள்? இந்தியில் பேசி விவரம் பெற்று மருந்து தருகீறீர்கள்? தமிழ்நாட்டு ஆஸ்பத்திரியில் எப்படி உங்களுக்கு வேலை கிடைத்தது? தமிழ் தெரியாமல் எப்படி நீங்கள் இங்கே உட்காரலாம் என்று அவர் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்?

"

ஆனால் எதுவும் புரியாமல் எந்த மருந்து தருவது என்று தெரியாமல் அந்த வட இந்திய நபர் முழிக்க… அவருக்கு ஒத்தாசை செய்ய வருபவரும் ஏதேதோ பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எல்லாவற்றிலும் இந்திக்காரர்களை வேலைக்கு சேர்த்தால் என்ன நியாயம்? என்று அவர் குமுறுவதும் அந்த வீடியோவில் உள்ளது.

சாதாரண படிப்பறிவில்லாத மக்கள் வந்துபோகும் அரசு மருத்துவமனையில், மருந்தகங்களில் வட இந்தியர்களை எப்படி பணிக்கு அமர்த்தலாம் என்ற கேள்விகள் இதன் மூலம் எழுந்துள்ளன.

தமிழ் தெரியாமல் மக்களின் உயிர் காக்கும் ஒரு பணியில் இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் எப்படி வேலைக்கு சேர்ந்தனர்? அவர்கள் எப்படி தேர்ந்து எடுக்கப்பட்டனர்? அதற்கான வழி முறைகள் என்ன என்ற கேள்விகளையும், சந்தேகங்களையும் மக்கள் எழுப்பி வருகின்றனர். பாமர மக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அரசு எப்படி ஒப்புக் கொள்கிறது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன.

தமிழ் மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனையில் தமிழே தெரியாத இந்தி நபர்கள் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளதன் நோக்கம், பின்னணி என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன. தமிழ் தேசியம் பேசும் கட்சிகள், அமைப்புகள் இதனை கேள்வி கேட்பார்களா? என்ற எண்ணமும், சந்தேகமும் இப்போது பாமர மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்னவோ உண்மை…!!