Noone can save sinking ship
அதிமுக அரசு கண்டிப்பாக கவிழ்ந்துவிடும் என்பதை மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், மைனாரிட்டி அரசை காப்பாற்றுவதற்காக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளதாகவும் ஆனாலும் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து என்னதான் குறுக்குவழியைக் கையாண்டாலும் ஆட்சி கவிழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதையே மூழ்கும் கப்பலை யாராலும் தடுக்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
