ஏழைகள் நலனுக்காக செயல்படும் தமிழக அரசை யாராலும் அசைக்க முடியாது…. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்…

தமிழக அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சி அனைவருக்கும் தெரியும் என்றும். ஆனால் இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் நலனுக்காகவே  மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார்.

தமிழக அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சி அனைவருக்கும் தெரியும் என்றும். ஆனால் அமைச்சர்கள் தொண்டர்கள் இருக்கும் வரை இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தற்போது தேர்தல் ஆணையத்தில் இருப்பதால் அது குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது என அவர் கூறினார்.

இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து 4 ஆண்டுகள் நிலைத்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் 1000 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.