தொண்டர்கள் உணர்வுகளை கேட்டு வருகிறேன் எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். 


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில்  பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்த தொண்டர்கள் , சசிகலாவை ஏற்றுகொள்ளவில்லை . 


அவருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பல விதங்களில் காட்டி வருகின்றனர். போஸ்டர்களை கிழிப்பது , சாணி அடிப்பது , வலைதளங்களில் கண்டபடி விமர்சிப்பது, மீம்ஸ் போடுவது என பல வகைகளில் விமர்சிக்கின்றனர். 


இன்னும் ஒரு படி மேலே போய் சசிகலாவை ஆதரிக்கும் அமைச்சர்களை தலைவர்களை விமர்சிக்கின்றனர், கிண்டலடிக்கின்ற்னர். மறுபுறம் தொண்டர்களின் கண்ணுக்கு ஜெயலலிதாவின் மறு உருவமாக தெரிகிறார் தீபா. 


அவரது பேட்டி தொலைக்காட்சிகளில் வந்ததும் , அவரது எதிர்ப்பும் , விமர்சணமும்தொண்டர்களை அவர் பக்கம் இழுத்து வருகிறது. தினமும் பல மாவட்டங்களிலிருந்து வண்டி கட்டிகொண்டு தொண்டர்கள் வந்து பார்க்கின்ற்னர்.


தினமும் தொண்டர்கள் கூட்டம் கூடுவதால் அடிக்கடி தீபா பால்கனிக்கு வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்துவிட்டு செல்கிறார். தொண்டர்கள் ஆரவார கூச்சலுக்கிடையே தீபா கூறியதாவது. 


அம்மா அவர்கள் விட்டு சென்ற நற்பணிகளை கருத்தில் கொண்டு விரைவில் எனது முடிவை அறிவிப்பேன். அது வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். இதுவரை எந்த முடிவையும் எடுக்க வில்லை , தொண்டர்களை விருப்பங்களை , கருத்துக்களை தெரிந்து கொண்டு எனது கருத்தையும் வைத்து விரைவில் முடிவு எடுப்பேன்.


சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து எந்த கருத்தும் இல்லை. அவர் முதல்வராவாரா என்று அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. வந்தால் அதன் பிறகு முடிவை கருத்தை சொல்வேன். 


தற்போது உள்ள சூழ்நிலை குறித்து முடிவு எடுக்க முடிய்யது,வருங்காலத்தை மனதில் வைத்து முடிவெடுப்பேன்.  விரைவில் சொல்கிறேன். இவ்வாறு தீபா தெரிவித்தார். எனது அரசியல் பயணத்தை யாராஅலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.