டிடிவி தினகரன் தலைமை கழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும், தற்போது அதிமுக துணை பொது செயலாளராக டிடிவிதான் உள்ளார் எனவும் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் திரும்பினார்.

இதனால் எடப்பாடி அமைச்சரவை தினகரனை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தது.

ஆனால் அவர்கள் கட்டுப்பாடுகள் பலமாக வைக்கவே இதுவரை எடப்பாடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

டிடிவி ஜாமினில் வெளியே வரும் வரை அதிமுகவின் இரு கட்சிகளும் இணையவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிடிவி 60 நாட்கள் பொறுப்பேன், கட்சி இணையவில்லை என்றால் மீண்டும் கட்சி பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

ஆனால் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை டிடிவிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதைதொடர்ந்து இன்று 60 நாட்கள் நிறைவுற்ற நிலையில் கட்சி பணியாற்றுவேன் என டிடிவி தெரிவித்தார்.

ஆனால் எடப்பாடி தரப்பு அவசர கூட்டம் போட்டு இணைப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி டிடிவி தினகரன் தலைமை கழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும், தற்போது அதிமுக துணை பொது செயலாளராக டிடிவிதான் உள்ளார் எனவும் தெரிவித்தார்.

வரும் வெள்ளிக்கிழமை டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அப்போது எதிர்கால அரசியல் திட்டம் பற்றியும் தொண்டர்களை சந்திக்க மேற்கொள்ளும்  சுற்றுப்பயண விவரங்கள் பற்றியும் விவரமாக தெரிவிக்க உள்ளார் எனவும் தெரிவித்தார்.  

தற்போது அதிமுக துணை பொது செயலாளராக டிடிவிதான் உள்ளார் எனவும், அவர் தலைமை கழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அதிமுகவின் அணிகள் இணைய வேண்டும் என்பதில் டிடிவி உறுதியாக உள்ளதாகவும், அவருக்கு உறுதுணையாக நாங்களும் உள்ளதால் காலம் முடியும் வரை அதிமுக ஆட்சி நீடிக்கும் எனவும், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கூறினார்.