Asianet News TamilAsianet News Tamil

"திமுகவுக்கு துப்பில்லை... வழக்குப்போட வக்கில்லை..." மீண்டும் ஃபார்முக்கு வந்த மாரிதாஸ்..!

"தரமில்லாத பொருளை சப்ளே செய்தவன் மீது வழக்குப் போட துப்பு இல்லை, அவனுக்கு ஆடர் கொடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை" - மீண்டும் திமுக அட்டாக் மோடில் மாரிதாஸ்

No spit for DMK ... no case to sue ... Maridas who came back to form
Author
Tamil Nadu, First Published Jan 13, 2022, 3:28 PM IST

திமுகவையும், அதன் செயல்பாடுகளையும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வீடியோ, சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தவர் யூடியூப்பர் மாரிதாஸ்.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.No spit for DMK ... no case to sue ... Maridas who came back to form

இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் அளித்ததையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, மாரிதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாரிதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "நான் சமூக சிந்தனையுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து அது சம்பந்தமான பொதுவான எனது கருத்துகளை பேஸ்புக், ட்விட்டர், யு டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இந்திய முப்படைத் தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகலைப் பதிவிட வேண்டாம் என ட்விட்டரில் தெரிவித்தேன்.No spit for DMK ... no case to sue ... Maridas who came back to form

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்துள்ளனர். என் மீது வழக்குப் பதிவுசெய்வதிலும் கைது நடவடிக்கையிலும் சட்டத்தைப் பின்பற்றவில்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் :- மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி போன் செய்து, சொன்ன கம்ப சூத்திரம் ரகசியம் என்ன..? அண்ணாமலைக்கு வந்த டவுட்..!

No spit for DMK ... no case to sue ... Maridas who came back to form

இருதரப்பையும் விசாரித்த நீதிபதி மாரிதாஸ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது செல்லாது என்று கூறி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியில் வந்த அவர், தனது ட்விட்டர் பதிவில், ‘’இக்கட்டான இந்த சூழலில் எனக்காக ஆதரவாக நின்ற பாஜக மத்திய மாநில தலைவர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நீங்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நீங்கள் என் மீது கொண்ட நம்பிக்கைக்கும் என்றும் உரியவனாக இருப்பேன்'’ என்று மட்டும் தெரிவித்து இருந்தார். அடுத்து 18 நாட்களாக எந்த வித பதிவையும் அவர் போடவில்லை.

 

இந்நிலையில் மீண்டும் திமுகவை விமர்சித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், '’திமுக அரசின் பொங்கல் தொகுப்பில் பல்லி. கேள்வி கேட்டவர் மீதே வழக்கு, மனவருத்தத்தில் தீக்குளித்த மகன் இறப்பு! தரமில்லாத பொருளை சப்ளே செய்தவன் மீது வழக்குப் போட துப்பு இல்லை, அவனுக்கு ஆடர் கொடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை.
கேட்டவர் குடும்பமே நாசம்! திமுக விடியல்?’’ என பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios