மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே நடக்கு மேற்கு வங்கமும், தோழர் ஜோதிபாசுவும் தான் நினைவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு மேற்கு வங்கத்தில் ஜோதிபாசுவின் ஆட்சி மிகச் சிறப்பாக இருந்து வந்தது.

அவரது மறைவுக்குப் பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு அம்மாநிலத்தில்  தலையெடுத்த மம்தா பானர்ஜி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினார்.

அதன்பிறகு இரண்டு பீரியட்களுக்கு  இடது சாரிகள் தொடர்ந்த தோல்வியையே சந்தித்து வருகின்றனர். கடந்த 2014 தேர்தலில் இடதுசாரிகள் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளை பின்னுக்குத் தள்ளி, பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி  தேய்ந்துகொண்டே போகிறது.

தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இடது சாரிகள்  மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாது என இன்று வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின்  அரசியல் ஜாம்பவான் ஜோதிபாசு வளர்த்து ஆளாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் அம்மாநிலத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது