No party nor dalit party Get rid of them
மஞ்சள் பொடியை கையில் அள்ளி பிள்ளையார் பிடிக்கலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். ஆனால் அது மருவி, மீண்டும் மீண்டும் குரங்காகவே மாறிக் கொண்டிருப்பதுதான் அதிர்ச்சியே.

உட்கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் ‘கள ஆய்வு’ எனும் பெயரில் தன் கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அடுத்தடுத்து அழைத்து சந்தித்து வருகிறார் ஸ்டாலின். அவர்கள் உட்கட்சிக்குள் இருக்கும் சிரமங்களை எடுத்துச் சொல்லி கட்சியை எப்படி பலப்படுத்துவது? எனும் ரீதியில் தகவல்களை தருவார்கள் என்றுதான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்தினரும் குமுறிக் கொட்டுவதோ தங்களின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளின் மீதான வெறுப்பையும், புகார்களையும்தான்.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோ அதற்கு ஒரு படி மேலே போய், அடுத்து வரும் தேர்தல்களில் கூட்டணியில் யார் யாரையெல்லாம் வைத்திருக்க வேண்டும், யார் யாரையெல்லாம் கழட்டிவிட வேண்டும்...என்று ஸ்டாலினுக்கே டிப்ஸ் கொடுத்திருப்பதுதான் ஹிட் ஹைலைட்.

கள ஆய்வின்போது ஸ்டாலினிடம் பேசிய ஈரோடு நிர்வாகிகள் ’முதல்ல விடுதலை சிறுத்தைகளையும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியையும் நம்ம கூட்டணியில இருந்து கழட்டி விடணும் தளபதி.
ஏன்னா, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்துல தலித்களும் அதிகம் அதே மாதிரி கவுண்டர்களும் அதிகம். தலித்களுக்கு கவுண்டர்களை பிடிக்காது, அதேமாதிரி கவுண்டர்களுக்கு தலித்களை பிடிக்காது. இந்த சூழ்நிலையில நாம ரெண்டு பேரையுமே கூட்டணியில வெச்சிருக்கிறது என்னமோ சமயோசிதமான செயலா நீங்க நினைக்காதீங்க. நிச்சயமா இது நமக்கு கைகொடுக்காது.
கவுண்டர் சமுதாய வாக்குகளை வெச்சிருக்கும் ஈஸ்வரனின் கொ.ம.தே.கட்சியானது தலித்துகளுக்கு ஆதரவா நாம நடத்துற போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், நிகழ்வுகளுக்கு வர்றதேயில்லை. அதேமாதிரி, தலித் வாக்கு வங்கியை கையில் வெச்சிருக்கும் விடுதலை சிறுத்தைகளோ நாம கவுண்டர் சமுதாயத்துக்கு தோள் கொடுக்குற மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துறப்ப கண்டுக்குறதில்லை.
இது போக மேல்சாதி பெண்களை, தலித் பசங்க காதலிச்சு திருமணம் செய்து பிறகு விவாகரத்தில் போய் நிற்கும் ‘நாடக காதல்’ விவகாரம் பற்றி எரியுறது இந்த மண்டலத்தில்தான்.

அதனால ஈஸ்வரனையும், திருமாவளவனையும் தயவு செஞ்சு கழட்டிவிடுங்க. அப்போதான் நாம ஜெயிக்க வசதியா இருக்கும்.” என்றார்களாம்.
கேக்குற வரைக்கும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அதன் பிறகு கடுப்பான குரலில் ஸ்டாலின் “இது ஒண்ணும் கூட்டணி முடிவை பற்றை கருத்து சொல்லும் கூட்டமில்லை. உட்கட்சியை வலிமைப்படுத்த கருத்துச் சொல்லுங்கன்னு சொன்னா, ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க?” என்று கடித்துவிட்டாராம்.
நீங்க எதையோ கேட்டாக்க, அவங்க எதையோ சொல்றாங்க. என்னமோ போங்க செயல்தல!
