நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போதே தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரவாகி வருகிறது. 

துக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினி பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும் என பல்வேறு மிரட்டல் வந்தது. 

ஆனால், எதுவுக்கும் ரஜினி அஞ்சவில்லை. இதுதொடர்பாக ரஜினி கூறுகையில்;- தான் பேசியது உண்மை என்றும் எதையும் கற்பனையாக தெரிவிக்கவில்லை. 1971-ம் ஆண்டு ராமர் சீதை சிலை உடையில்லாமல் கொண்டுவரப்பட்டது உண்மை தான் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர்,  இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை, மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதையாராலும் தடுக்க முடியாது என கருணாநிதி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் இருந்தாலும் கூட பொது வாழ்வில் அதிக நாட்டமுடையவர் ரஜினி. மேலும் அவர் யாருடைய மனமும் புண்படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

 

அப்படி புண்படுத்திவிட்டால் அந்த புண்ணை ஆற்ற வேண்டும் என்பதில் முனைப்புடையவர். அவர் அரசியலுக்கு நேரடியாக வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. வந்தால் வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கருணாநிதி பேசும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.