7 பேரின் விடுதலைக்காக ஜெயலலிதா இறுதி மூச்சு வரை போராடியதை யாராலும் மறுக்க முடியாது.. சசிகலா உருக்கம்.!

30 ஆண்டுகாலம் தங்களது வாழ்க்கையை தொலைத்த நிலையில் இன்று அதற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருப்பது அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் சந்தோசத்தை அளித்துள்ளது.

No one can deny that Jayalalitha fought till her last breath for the freedom of 7 people.. Sasikala

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என சசிகலா கூறியுள்ளார். 

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 30 ஆண்டுகாலம் தங்களது வாழ்க்கையை தொலைத்த நிலையில் இன்று அதற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருப்பது அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் சந்தோசத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க;- தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரி… தொல்.திருமாவளவன் பரபரப்பு கருத்து!!

No one can deny that Jayalalitha fought till her last breath for the freedom of 7 people.. Sasikala

புரட்சி தலைவலி அம்மா ஆட்சி காலத்தில், ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை, விடுதலை செய்வதற்காக 2014 பிப்ரவரி 19-ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து ஏழு பேரின் ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்த போது தனி கவனம் எடுத்துக் கொண்டார். ஜெயலலிதா தனது இறுதி மூச்சு வரை இந்த ஏழு பேரின் விடுதலைக்காக தொடர்ந்து போராடியதை யாராலும் மறுக்க முடியாது.

No one can deny that Jayalalitha fought till her last breath for the freedom of 7 people.. Sasikala

புரட்சி தலைவலி அம்மா மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா அம்மா நம்மை விட்டு பிரியாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் முன்கூட்டியே நமக்கு இந்த நல்ல விஷயங்கள் நடந்திருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சுதந்திர காற்றை சுவாசிக்க இருக்கும் அனைவரும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு 6 பேர் விடுதலை தீர்ப்பே ஆதாரம்- மு.க.ஸ்டாலின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios