“சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று விசில் செயலியில் நேற்று வந்த புகாரின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பாதிப்படைந்த இடங்களை நேற்று மாலையே நேரில் சென்று பார்வையிட்டார்.

நடிகர் கமல், மக்கள் நீதி மய்யத்திற்காக விசில் ஆப்ஸ் அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் அது குறித்து அவசியத்தை விளக்கினார்.

எந்த இடத்தில் தவறு நடந்தாலும், மக்கள் செய்ய வேண்டியது இந்த ஆப்ஸ் மூலம் புகார்  தெரிவித்தால் போதுமானது, அந்த இடத்தில் வந்து நிற்பேன் என நடிகர் கமல் தெரிவித்து இருந்தார்.

சொன்னது போலவே தற்போது, வீடுகள் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களை பார்த்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கான உதவிகளை செய்ய ஏற்பாடு  செய்து வருகிறார் நடிகர் கமல்.

பாதிக்கபட்டவர்களில் பெண் ஒருவர் பேசும் போது, எங்களுக்கு எலக்ஷன் வேண்டாம் ஆட்சியும் வேண்டாம்...தலைவரும் வேண்டாம் ...நாங்க இப்படியே இருந்துட்டு போறோம் ...எங்கள யாரும் பார்க்க கூடவர வேண்டாம் என வேதனையில் பேசி உள்ளார் இந்த தாய்.