No need for CBI inquiry - edappadi given Petition in the High Court

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரணையோ, மத்திய வருவாய் துறையின் விசாரணையோ தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கியதாக வெளியான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தக்கோரி, மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எம்.எல்.ஏ. சரவணன் பண பேரம் விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பண பேரம் நடத்தப்பட்டது என்றும், விதிகளுக்கு முரணாக லஞ்சம் கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர் என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மு.க.ஸ்டாலின் மனு மீதான விசாரணை நீதிமன்றம் நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்ச்ர எடப்பாடி பழனிசாமி இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரினார். ஆளுநர் வித்யாசாகர் கடிதத்தின்பேரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவகாரங்கள் சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், இதில் சிபிஐயோ, மத்திய வருவாய் துறை விசாரணைக்கு தேவை இல்லை என்று அதில் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவகாரங்கள் சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அதில் கூறியுள்ளார். இதேபோல் பேரவை செயலாளர் பூபதியும் மனு தாக்கல் செய்துள்ளார்.