Asianet News TamilAsianet News Tamil

திமுக தமிழன துரோகி... இனி பாஜக இல்லாமல் தமிழகத்தில்ஆட்சி அமைக்க முடியாது... எகிறியடிக்கும் ஹெச்.ராஜா..!

பாஜகவின் தயவு இல்லாமல் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

No more rule in Tamil Nadu without BJP says H.Raja
Author
Tamil Nadu, First Published Aug 27, 2020, 2:11 PM IST

பாஜகவின் தயவு இல்லாமல் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தமிழகம் முழுவதும் பாஜக எழுச்சி அடைந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் அந்த தகிடு தத்தங்களை புரிந்து கொண்டு விட்டனர். விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலமாக நேரடியாக உதவிகளை வழங்கி வரும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது வேதனைக்குரியது. இதில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

No more rule in Tamil Nadu without BJP says H.Raja

திமுக பொய் பித்தலாட்டத்தை கட்டமைத்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மொழி ரீதியான பன்முகத்தன்மையை எதற்காக திமுக எதிர்க்கிறது? மொழி ரீதியாக பிளவுப்படுத்துவது தேச துரோகம். அதை திமுக செய்கிறது. திமுக தமிழ் விரோதி. தமிழனுக்கு விரோதி. தேசியம்தான் பாஜவின் இலக்கு.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். தமிழகத்தில் ஆட்சி அமைவதில் ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக பாஜக உள்ளது. எந்த கூட்டணி அமைத்தாலும் இனி பாஜக இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

No more rule in Tamil Nadu without BJP says H.Raja

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். நீட் தேர்வை புறக்கணிப்பது என்பது மாணவர்களின் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை’’ என அவர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios