Asianet News TamilAsianet News Tamil

என்ன செய்தாலும் தமிழக மக்கள் மனதில் பாஜக இடம் பிடிக்க முடியாது... கார்த்தி சிதம்பரம் பரபரப்பு கருத்து!!

அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வளர வேண்டும் என்று நினைத்தால், அது தவறாக தான் முடியும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

no matter what bjp cannot gain a place in the minds of the people of tamilnadu says karti chidambaram
Author
First Published Nov 21, 2022, 10:31 PM IST

அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வளர வேண்டும் என்று நினைத்தால், அது தவறாக தான் முடியும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசியில் தமிழ் சங்கமம் நடத்துவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதை வைத்து பாஜக வளர வேண்டும் நினைத்தால் அது நடக்காது. கால்பந்து வீராங்கனை இறப்பு தொடர்பாக மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்கள் மீது காவல்துறை கிரிமினல் வழக்கு தொடர்வது ஏற்புடையது அல்ல.

இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு..!

கிரிமினல் வழக்கு தொடர்ந்தால் எந்த மருத்துவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயங்குவார்கள். சமீப காலமாக பல இடங்களில் குண்டுவெடிப்பு நடந்து வருகிறது. உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாத செயல் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதிமுக விவகாரத்தில் இரட்டை தலைமை அந்த கட்சிக்கு ஒத்து வராது என்று பலமுறை நான் கூறியுள்ளேன்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை... அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி!!

அது வழி தான் நடந்து வருகிறது. அதிமுகவில் நடப்பது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக வளர வேண்டும் என்று நினைத்தால், அது தவறாக தான் முடியும். பாஜக தமிழகத்தில் வளர வேண்டும் என்று நினைத்தாலும், அது ஒரு எல்லை தான். எல்லையை தாண்டி அவர்களால் வர முடியாது. பாஜக எந்த யுக்தியை பயன்படுத்தினாலும் தமிழக மக்கள் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios