நாடாளுமன்ற தேர்தலை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை... அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி!!

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

we are not worried about the parliamentary elections says minister i periyasamy

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளைக்கு தேர்தல் வைத்தாலும் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.

இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு..!

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் தான். கூட்டுறவு துறையின் முன்னோடி தமிழகம் தான். இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் ஆடு, மாடு வளர்ப்போருக்கு வட்டியில்லா கடனாக ரூ.800 கோடி அளவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை ரூ.40 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் இது ரூ.100 கோடியாக உயரும்.

இதையும் படிங்க: குரல்வளையை நசுக்கும் திமுக..? தேசியவாதி கிஷோர் கே சாமி கைது..! பாஜக சட்ட உதவி செய்யும்..! .! அண்ணாமலை ஆவேசம்

மேலும் கூட்டுறவு துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். கூட்டுறவு துறையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 6,500 புதிய ஊழியர்கள் தேர்வு செய்து நியமிக்கப்பட உள்ளனர் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios