மூன்று பூஜ்ஜியமும் இணைந்து ராஜ்ஜியம் அமைத்ததாக வரலாறு கிடையாது.. இறங்கி அடிக்கும் ஆர்.பி.உதயகுமார்..!
அரசியல் நாகரித்தோடு பேசுவதற்கும், பிரச்சனைகளை கையாளுவதற்கும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பயிற்சி கொடுத்துள்ளனர்.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இடையேயான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் உடன் மோதலா..! டிடிவி தினகரனை சந்தித்ததில் எனக்கு விருப்பம் இல்லையா.? இபிஎஸ்யை விளாசும் வைத்தியலிங்கம்
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்திப்பு என்பது சந்தர்ப்பவாத சந்திப்பு. இதனால் எவ்வித தாக்கமும் ஏற்படபோவதில்லை. அதிமுக விவகாரத்தில் பலமுறை நீதிமன்றத்தில் முறையிட்டும் அவர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது. பொதுச்செயலாளர் பொறுப்பில் எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் தான் வைத்துள்ளார்கள். இதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது என்றார்.
இதையும் படிங்க;- இதை முன்பே கூறியிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது! இந்த விஷயத்தை திசை திருப்பவே இலக்கா மாற்றம்! ஆர்.பி.!
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி. தினகரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதிமுக என்பது ஒன்றாம் நம்பர். அந்த ஒன்று இருக்கும்போது, பூஜ்ஜியத்திற்கெல்லாம் மதிப்பு கிடையாது. பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் இணைந்து ராஜ்ஜியம் அமைத்த வரலாறு கிடையாது.
அரசியல் நாகரித்தோடு பேசுவதற்கும், பிரச்சனைகளை கையாளுவதற்கும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பயிற்சி கொடுத்துள்ளனர். அந்த அரசியல் நாகரீகம் அவர்களுக்கு இருந்தால், மக்கள் முகம் சுளிப்பது போல பேச மாட்டார்கள் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.