Asianet News TamilAsianet News Tamil

முறைத்துக் கொண்ட மோடி – ராகுல் காந்தி !! கை குலுக்குவதை தவிர்த்து விலகிச் சென்றனர் !!

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும், அருகருகே சந்தித்த போதும், எதுவும் பேசாமல், கை குலுக்குவதை கூட தவிர்த்து, விலகிச் சென்றனர்.


 

No good relationship with modi andragul
Author
Delhi, First Published Dec 14, 2018, 8:38 AM IST

நாடாளுமன்ற  வளாகம் தாக்கப்பட்ட சம்பவத்தின், 17வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, நாடாளுமன்ற  வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில், வீரமரணம் அடைந்தவர்களின் ஃபோட்டோக்களுக்கு , தலைவர்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.
No good relationship with modi andragul
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக  மூத்த தலைவர் அத்வானி, குடியரசு துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உட்பட பலர் பங்கேற்றனர். காங்கிரஸ், தலைவர் ராகுல், அவரது தாய் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் ஆகியோரும், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ்., வெற்றி பெற்ற பின், நரேந்திர மோடி - ராகுல் நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்ச்சி இது.

No good relationship with modi andragul
இருவரும், மிக அருகே, நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகனிடம், பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.மத்திய அமைச்சரும், பாஜகவைச் வைச் சேர்ந்தவருமான,விஜய் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான, ராம்தாஸ் அத்வாலே ஆகியோர், காங்கிரஸ்  தலைவர் ராகுலிடம் கை குலுக்கி, நலம் விசாரித்தனர்.


ஆனால் பிரதமர் மோடியும், ராகுலும், அருகருகே நேருக்கு நேர் சந்தித்தபோதும், நலம் விசாரிப்பது, கை குலுக்குவது ஆகியவற்றை தவிர்த்து, விலகிச் சென்றனர். இது அங்கிருந்தவர்களிடையே ஆச்சரிய்ததை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios