No future for dmk.told gurumoorthy
திமுகவும், அதிமுகவும் இளைஞர்களை கவர்வதில் தவிறிவிட்டன என்றும், திமுக இனி தேறவே தேறாது என்றும் துக்ளக் பத்திரிக்கையின் 48 ஆவது ஆண்டு விபாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசினார்.
துக்ளக் பத்திரிகையின் 48ம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்த விழாவில் பேசிய குருமூர்த்தி, தேசிய கட்சிகள் தமிழக கழகங்களான திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அப்படி வைத்துக்கொள்ளும் வரை அக்கட்சிகள் வளராது என்றும் தெரிவித்தார்.
புதிதாக கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தை பாராட்டய அவர், ரஜினிக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றும், அவரும் எந்த காரணத்தைக் கொண்டு கழகங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
திமுகவும், அதிமுகவும் தற்போது இளைஞர்களை கவர தவறிவிட்டதாகவும், அதனால் அக்கட்சிகள் இனி எடுபமாது என்றும் குருமூர்த்தி கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவா் தற்போதைய கழகங்களின் தொடா்ச்சியாக தான் இருப்பாரே தவிர அவர் மாற்றாக அமைய மாட்டார் என்றும் தெரிவித்தார்.
ரஜினிகாந்தும், மோடியும் இணையும் பட்சத்தில் தமிழகத்துக்கு ஒரு சிறப்பான எதிர்கலம் இருக்கும் என்றும், கழகங்களிடம் இருந்து தமிழகத்தை இரு தரப்பினரும் இணைந்து பாதுகாப்பார்கள் என்பதால் தமிழகம் குறித்து இனி கவலைப்பட தேவையில்லை என்றும் குருமூர்த்தி தெரிவித்தார்.
