Asianet News TamilAsianet News Tamil

வாக்கு எண்ணிக்கையின்போது நோ எண்ட்ரி... தேர்தல் ஆணையம் போட்ட கட்டுப்பாடு..!

வரும் மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

No entry during the counting of votes ... Restriction imposed by the Election Commission
Author
Tamil Nadu, First Published Apr 28, 2021, 5:47 PM IST

வரும் மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.No entry during the counting of votes ... Restriction imposed by the Election Commission

இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அதில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையும் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து அதில் ’நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் அல்லது கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் அதற்கான சான்றிதழ் கட்டாயம். கொரோனா பரிசோதனை செய்யாத அல்லது தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொள்ளாத கட்சி முகவர்கள், வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியில்லை. இந்த சான்றிதழ் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு 48 மணிநேரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.No entry during the counting of votes ... Restriction imposed by the Election Commission

வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது மாவட்ட தேர்தல் அதிகாரியின் பொறுப்பு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பொதுமக்கள் கூட அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தடுப்பு விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios