38 திமுக கவுன்சிலர் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தும்.. நெல்லை மேயர் சரவணன் வெற்றி பெற்றது எப்படி?
நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
நெல்லையில் 54 கவுன்சிலர் உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் ஒருவர் கூட கலந்துகொள்ளதா நிலையில் நெல்லை மேயர் சரவணன் மீதான நம்பிக்கையில்லா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிளை சேர்ந்தவர்களும், 4 அதிமுக கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். இந்நிலையில், ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர்.
இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதும் அவருக்கு எதிராக மாற்றக்கோரி கோஷங்களை எழுப்புவதுமாக இருந்து வந்தார். மேலும் நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12ம் தேதி நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த நிலையில் வாக்கெடுப்பிற்கு குறைந்தபட்சம் 44 கவுன்சிலர்கள் இருக்க வேண்டும். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. தீர்மானம் கைவிடப்பட்டதால் இனி ஒரு ஆண்டுக்கு தீர்மானம் கொண்வரமுடியாது.