சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று வந்த மு.க.அழகிரி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கட்சி தொடர்பான தனது ஆதங்கங்களை கருணாநிதியிடம் கொட்டியதாக குறிப்பிட்டார்.

திமுகவின் உண்மையான விசுவாசிகள் தனது பக்கம் இருப்பதாகவும், தனது ஆதங்கம் என்ன என்பதை விரைவில் வெளிப்படுத்துவேன் என்றும் பேட்டி அளித்தார். இந்த பேட்டி அளித்துவிட்டு கோபாலபுரம் திரும்பிய மு.க.அழகிரிக்கு  எதிரே ஸ்டாலின் வந்தார்.

அழகிரியைப் பார்த்ததும்  ஸ்டாலின் ஒதுங்கிக் கொண்டதோடு உடனடியாக கோபாலபுரத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் தனது பேச்சுக்கு யாரும் ஆதரவு தாரததால் அதிர்ந்து போன் அழகிரி, தனக்கும், ஸ்டாலினுக்கும் நெருக்கமான சிலரை ஸ்டாலினிடம்  சமரசம் பேசுவதற்காக தூது அனுப்பியுள்ளார்.

தூது பேச வந்தவர்கள் மீது ஸ்டாலின் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், தயவுசெய்து சமரசம் பேசுவதென்றால் என் கூட பேச வேண்டாம் என்றும், இனிமேல் அழகிரிக்கு திமுகவில் இடமில்லை, கட்சியை உடைக்க நினைக்கும் அவருக்கு நீங்க சப்போர்ட் பண்ணுகிரீங்களா ? அடித்து விரட்டாத குறையாக பேசியுள்ளார்.

ஸ்டாலினின் கோபத்தை பார்த்து அதிர்ந்து போன அந்த தூதுவர்கள், உடனடியாக இதை அழகிரியிட்ம் தெரிவித்தனர்.

இதனால் மீண்டும் கடும் கோபத்துக்கு ஆளான அழகிரி, இனி திமுகவை நான் உடைக்க மாட்டேன் ஆனால் அதுவாக உடைந்துவிடும்… அப்படி உடைந்தால் அதற்கு முழுக்காரணமும் ஸ்டாலின்தான் என காட்டமாக பேசியிருக்கிறார்.

இதனிடையே தற்போது கூடியுள்ள திமுக செயற்குழுக் கூட்டத்தில் அழகிரி குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.