Asianet News TamilAsianet News Tamil

தரையில் அமரும் சிதம்பரம்..!! தலையனையும் பிடுங்கியாச்சு...அக் 3 வரை காவல்...!!

 நாற்காலி, தலையனையைக் கூட பறித்துவிட்டார்கள். இதனால் படுக்கையில்தான் அவர் அமர்கிறார். இதனால், அவருக்கு முதுகுவலி அதிகமாகிவிட்டது”

no chair and bed for chidambaram in tihar
Author
Delhi, First Published Sep 19, 2019, 7:42 PM IST

திஹார் சிறையில் சிதம்பரத்துக்கு தலையனை, அமரும் நாற்காலியைக் கூட பறித்துவிட்டார்கள். படுக்கையில்தான் அமர்கிறார், முதுகுவலியால் அவதிப்படுக்கிறார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கபில்சிபல், மற்றும் அபிஷேக் சிங்வி சிதம்பரம் தரப்பில் இன்று வாதிட்டனர்.வாதங்களைக் கேட்ட நீதிபதி ஏ.கே.குஹர், சிதம்பரத்துக்கான நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.

no chair and bed for chidambaram in tihar

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது, 20 நாட்கள் சிபிஐ காவலுக்குப்பின் கடந்த 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை 19-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி குஹர் உத்தரவிட்டார் ப.சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குஹர் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரம் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில் " சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கூடாது. சிதம்பரத்துக்கு வயது மூப்பு காரணமாக ஏராளமான உடல் உபாதைகள் இருக்கின்றன, அவருக்கு மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும். அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் " என்று வாதிட்டார்.

 no chair and bed for chidambaram in tihar

அப்போது மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "முன்னாள் அமைச்சர் சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்டு இருந்த நாற்காலி, தலையனையைக் கூட பறித்துவிட்டார்கள். இதனால் படுக்கையில்தான் அவர் அமர்கிறார். இதனால், அவருக்கு முதுகுவலி அதிகமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிடுகையில், " சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும். சிறைநிர்வாகம் சார்பில் அவருக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்படும்” என்றார். இதையடுத்து " ப.சிதம்பரத்துக்கு மருத்துப்பரிசோதனை அளிக்க அனுமதி அளித்து, அவரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதிவரை நீட்டித்து" நீதிபதி உத்தரவிட்டார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios