எனக்குப் பின்னால் கடவுளும், மக்களும்தான் உள்ளனர் என்றும் கண்டிப்பாக பாஜக இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று தொடர்ந்த சர்ச்சை எழுந்துவந்த நிலையில் ரஜினி இன்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆன்மிகப் பயணமாக கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து நடிகர்  ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட ஸ்தலங்களுக்குப் சென்றார். தற்போது  10 நாட்களுக்குப் பிறகு இன்று பிற்பகல் சென்னை திரும்பினார்.

இதையடுத்து சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று தெரிவித்தார்.

ஆன்மிகப் பயணம் சென்று வந்தபிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது என்று தெரிவித்த ரஜினி, ரத யாத்திரை என்பது மதக் கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதக் கலவரம் எந்த வடிவில் வந்தாலும், தமிழக அரசு அதனைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

சினிமாத்துறையில் நடக்கும் ஸ்டிரைக் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “முதலில் இருந்தே நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், சினிமாவில் வேலை நிறுத்தம் என்பதை மட்டும் செய்யவே கூடாது இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்றார். கமல்ஹாசன் என்னைப் பற்றி கூறிய கருத்துக்கு தான்  பதில் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

எனக்குப் பின்னால் கடவுளும், மக்களும்தான் உள்ளனர் என்றும் கண்டிப்பாக பாஜக இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று தொடர்ந்த சர்ச்சை எழுந்துவந்த நிலையில் ரஜினி இன்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளிவைத்தார்.