கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நிவர் புயல் கரையை கடந்து விட்டது என்று மெத்தனமாக இருக்க முடியாது என்றும் கரையைக் கடந்து விட்டாலும் ஆறு மணி நேரத்திற்கு புயலின் வலிமை இருக்கும் என்றும் அதனால் வட தமிழகத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
குறிப்பாக வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும், புயலுக்கு பின்னரும் ஒரு சில மணி நேரங்களுக்கு காற்று மற்றும் கனமழை தீவிரமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 26, 2020, 9:21 AM IST