நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவர் புயலின் கோரத்தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 26, 2020, 10:35 AM IST