பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற பாஜக கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பீகார் சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த முதல்வர் மற்றும் பதவியேற்பு நாள் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலுக்கு  முன்பாகவே கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்பார் என பாஜக தலைமை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 

அப்படி இருந்த போதிலும் கூட்டணி விதிகளின் கீழ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி , முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். பாஜகவின் சுஷில்குமார் மோடி துணை முதல்வராக பதவியேற்பார். இதனையடுத்து, பீகாரின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது.