ஏற்கனவே அறிவித்தபடி கைலாசா ரிசர்வ் வங்கியின் பணத்தை விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிட்டார் நித்யானந்தா.

அகமதாபாத் போலீசாரால் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கடந்த காலத்தில் ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். அதன்படி, ஈக்வடாரில் ஒரு தீவை வாங்கியதாக முந்தைய தகவல்கள் வந்ததும், அதை ஈக்வடார் அரசு மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைலாசா நாட்டை அமைந்துள்ளதாக கூறும் நித்யானந்தா, மத்திய வங்கியை உருவாக்கியுள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக கைலாசா பணத்தை அச்சிடப்போவதாகவும் தெரிவித்து இருந்தார்.

அது தொடர்பான முக்கிய அறிவிப்பை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவேன் என்று முகநூலில் வீடியோ வெளியிட்டு கூறி இருந்தார். அது தொடர்பாக சில தகவல்களை ஆராய்ந்தபோது, கடந்த ஆண்டு அக்டோபரில் நித்யானந்ததா, கைலாசா லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தை ஹாங்காங்கின் உலகளாவிய நிதி மையத்தில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது

.

அதற்கு, ஹாங்காங்கின் ஸ்டான்லி தெருவில் உள்ள ஒரு உலக அறக்கட்டளை கோபுரத்தின் முகவரியை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி இன்று கைலாசியன் நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் நித்யானந்தா.