பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் நேற்று ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் இன்றுமீண்டும் முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

பீகார் மாநிலத்தில் நிதிஷின் கட்சிக்கு 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கு 80எம்.எல்.ஏக்களும், காங்கிரஸுக்கு 27 எம்.எல்.ஏக்களும், பாஜக கூட்டணி 58 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

இதனிடையே ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி. ஹோட்டலுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டு இருந்து வருகிறது.

இதுகுறித்த சிபிஐ குற்றப்பத்திரிக்கையில், லாலுவின் மகனும் பீகார் மாநிலத்தின் துணை முதல்வருமான தேஜஸ்வியின் பெயரும் உள்ளதால், முதலமைச்சர் நிதிஷ் குமார் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.   

ஆனால் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாலு, தமது மகன் பதவி விலக மாட்டார் எனத் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா நேற்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 51 பேர் ஆதரவுடன் இன்று மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

மேலும் துணை முதலமைச்சராக சுஷில் குமார் மோடி பதவியேற்று கொண்டார்.

ஆளுநர் உத்தரவின்படி 2 நாட்களில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிதிஷ்குமார் நிரூபிக்க உள்ளார்.