எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும்  வாத்தை அறுப்பதற்கு சமமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், வங்கிகளில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாக்கப்படும். வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வோம். டெபாசிட்களுக்கான காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.எல்ஐசியில் தனக்குள் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கி திவாலானால், ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்க டெபாசிட்தாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வர்த்தக ரீதியில் செயல்படும் வங்கிகளை அரசு கவனித்து வருகிறது. மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படும்’’எனக் கூறினார்.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் அரசு வசமுள்ள பங்குகளின் ஒரு பகுதியை விற்க முடிவெடித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பினர். இந்நிலையில், இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘’எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது. இது பொன்முட்டையிடும்  வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளர்.