ராமர் கோயில் விழா...LED திரைகள் அகற்றப்படுகிறது.! தமிழக அரசின் அடக்குமுறை தொடர்கிறது - நிர்மலா சீதாராமன்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமுடியாத படி கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகளை திமுக அரசு போலீசாரை கொண்டு அகற்றி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை கோயில்களில் எல்இடி திரைமூலம் ஒளிபரப்பு செய்ய பாஜகவினர் முயன்று வருகின்றனர். இதற்கு தமிழக அரசு சார்பாக அனுமதி இல்லையென தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது.
இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனியாருக்கு சொந்தமான புகழ்பெற்ற காமாட்சி கோவிலின் உள்ளே, காலை 8 மணி முதல் பஜனைகள் தொடங்கியுள்ளது. அப்போது சாதாரண உடையில் வந்த காவலர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த LED திரைகள் அகற்றியுள்ளனர். ஒரு கோவிலில், தனிப்பட்ட முறையில் கும்பாபிஷேக நிகழ்வை பார்க்கிறார்கள்.
எல்இடி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு
இதனை தடுப்பது உரிமையை மீறிய செயலாகும். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இந்து விரோத திமுக இப்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது என நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்இடி திரைகள் முலம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் எல்இடி திரைகளை அகற்றியுள்ளனர். இதன் காரணமாக கோயில்களில் எல்இடி விநியோகம் செய்தவர்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த செயல் வணிகர்களை “வயித்திலே அடிப்பதாகும் என நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அயோத்தி இராமர் விழா.. அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா- திருமாவளவன்