இரண்டாவது பாதுகாப்புத்துறை பெண் அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார்.

மத்திய அமைச்சரவை 3-வது முறையாக அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் 9 பேருக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, நிதியமைச்சர் அருண் ஜெட்லி வசம் இருந்த பாதுகாப்புத்துறை, நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்குப் பிறகு 2-வது பெண்  பாதுகாப்புத்துறை அமைச்சரானார்.

பாதுகாப்புத்துறை பொறுப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.