மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரையில் பிறந்தார். அவரது தந்தை நாராயணன் சீத்தாராமன், ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றியவர். நிர்மலா சீத்தாராமன் மதுரை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் படித்தவர். குறிப்பாக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார்.

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூலம் அரசியலுக்கு வந்தார். பின்னார் கடந்த அரசில் முக்கிய துறையான  பாதுகாப்புத் துறையை கவனித்து வந்தார். இதையடுத்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் நாட்டின் மிக உயரிய துறையான நிதித் துறை பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த மே மாதம் 30-ந் தேதி  நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து  மக்களவையில் நேற்று  மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.

இந்நிலையில் நிதி அமைச்சராக  மத்திய பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்யும் நிகழ்வை காண நிர்மலாவின் தந்தை நாராயணன் சீதாராமன், தாய் சாவித்திரி ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தனர். 

முன்னதாக நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செயவதற்கு முன்பு தாய்- தந்தையரிடம் ஆசி பெற்றார்.