20 லட்சம் விவசாயிகளுக்கு சேலார் பம்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.  சூரிய ஒளி மூலம்  மின்சாரம் தயாரிக்க இயந்திரங்கள் வழங்கப் படும் எனவும் அதற்கு மானியம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.  மத்திய பட்ஜெட்டை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் . மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார். 

மக்களின் வருமானத்தை உயர்த்தி வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட்டாக அமையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  சாதாரண மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட் இது என்றார் தொடர்ந்து பேசிய அவர்,   இந்த பட்ஜெட் சாதாரண மக்களின் வருமானத்தை உயர்த்தவும், அவர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தவும் உதவும் .  ஜி.எஸ்.டி.யால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4% செலவு குறைந்துள்ளது. என அவர் தெரிவித்தார்.  இந்தியாவின் வளர்சியை உலகம் உற்று நோக்குகிறது என்றார்.  இந்தியாவின் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக உள்ளது என்றார்.  உட்கட்டமைப்பு வளர்ச்சியை  வலுபடுத்துவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடிகிறது .  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.  நேரடி மானிய திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவியுள்ளது.  

அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது என்றார்.  அதே போல் 20 லட்சம் விவசாயிகளுக்கு சேலார் பம்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.  சூரிய ஒளி மூலம்  மின்சாரம் தயாரிக்க இயந்திரங்கள் வழங்கப் படும் எனவும் அதற்கு மானியம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ளார்.  அதே போல் விவசாய துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் அறிவித்தார்.  பூமி திருத்தி உண் என்ற ஔவையாரின் வரிகளை கூறி நிர்மலா சீதாராமன் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.  விவசாய பொருட்கள் போக்குவரத்துக்காக செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.