நாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை பற்றிய கண்காணிப்பு, விசாரணை மற்றும் அவர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட பணிகளை தேசிய புலனாய்வு முகமை செய்து வருகிறது.

இந்த முகமைக்கு கூடுதல்  அதிகாரங்களை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யபட்டது. அந்த மசோதாவின் மீது மக்களவையில் இன்று  கடும் விவாதம் நடந்தது.

அப்போது பேசிய நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ,ராசா, தன் மீதான 2G வழக்கில்  முதலில் சிறைக்கு அனுப்பிய சிபிஐ, பின்னர் தனது ஏல முறை சரிதான் என்று கூறியதையும், குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து விசாரணை அமைப்பு இயங்க கூடாது என்றும் ஆவேசமாகப் பேசினார்.

கவுரி லங்கேஷ், தபோல்கர் போன்றோரின் மரணத்தை நிகழ்த்தியவர்கள் பற்றியும், வலதுசாரி தீவிரவாதம் பற்றியும் NIA விசாரிக்குமா என கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு பதில் அளிக்க ஆடியாமல் அமித்ஷா திணறினார்.