100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என புகழேந்தி தெரிவித்திருப்பது தவறு என்றும், அடுத்த ஆண்டே பாஜக தமிழகத்தில் காலூண்றும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவால் விடுத்தார்.

சென்னை விமானத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசையும், மாநில அரசையும் குறை கூறுவதையே தனது தொழிலாக வைத்திருக்கிறார் என குற்றம் சாட்டினார்.

இல்லாத இந்தி திணிப்பிற்கு எதிராகவே ஸ்டாலின் பேசி வருகிறார் என்றும் , எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார்' எனவும் தமிழிசை சவுந்திரராஜன்  குறிப்பிட்டார்.

தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல. அரசுக்கு போதிய கால அவகாசம் தர வேண்டும். எந்த நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என புகழேந்தி தெரிவித்திருப்பது தவறு என்றும், அடுத்த ஆண்டே பாஜக தமிழகத்தில் காலூண்றும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவால் விடுத்தார்.