வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அதன்பின் துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் இந்த சமயத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களின் சந்திப்பின் போது "சினம் கொண்ட அதிமுக சிங்கத்திடம் திமுக என்ற மதம் கொண்ட யானை தோற்று ஓடும் என தெரிவித்தார். பின்னர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து தெரிவிக்கும் போது, கொள்ளையடித்த பணம் இருந்தால் கண்டிப்பாக வருமானவரித்துறையினர் சோதனை செய்யத்தான் செய்வார்கள் என்றும் அதற்கு அடுத்தபடியாக சாத்தூர் அமமுக வேட்பாளர் சுப்பிரமணியன் 40 கோடியை பதுக்கி வைத்துள்ளார்.

அவர் வீட்டிற்கு எப்போது தான் வருமானவரி சோதனை நடத்துவார்களோ? என பேசினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.அமைச்சரின் இந்த பேச்சு அரசியல்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.