Next cm staline

தற்போதுள்ள குழப்பமான அரசியல் சூழ்நிலையில் இருந்து தமிழ்நாடு தப்பிக்க அரசியல் மாற்றம் வேண்டும் என்றும் அடுத்த ஆறே மாதத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரை முருகன் தெரிவித்தார்.

சென்னை ஆர்,கே,நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து தண்டையார்பேட்டையில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை முருகன் கலந்த கொண்டு பேசினார்.

அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் தினகரனை கடுமையாக தாக்கிப் பேசினார். சிறையில் இருந்து கொண்டு சசிகலாவும், தகுதியில்லாத டி.டி.தினகரனும், தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை இயக்கி வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா என்பதே தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தெரிவித்த துரை முருகன் அடுத்த ஆறே மாதத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கும் என் உறுதிபடத் தெரிவித்தார்