Asianet News TamilAsianet News Tamil

செய்தியை நிறுத்தாத சேனல்களை அரசுக் கேபிளில் கட்! சமூகவளைதலங்களில் நேரடியாக ஒளிபரப்பிய நியூஸ் தொலைகாட்சிகள்...

News Channel and cable TV operators threaten to shut down the news
News Channel and cable TV operators threaten to shut down the news
Author
First Published May 22, 2018, 5:43 PM IST


தொடர்ந்து நடக்கும் ஸ்டெரிலைட் தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பக் கூடாது என செய்தித் தொலைக்காட்சிகளுக்கு தமிழக அரசு நெருக்கடி  கொடுத்ததால் செய்தி தொலைகாட்சிகள் சமூகவலைதளங்கள் மூலம் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள்.

News Channel and cable TV operators threaten to shut down the news

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில் இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயத்துடன் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை தொடரும் அச்சம் எற்பட்டுள்ளது.

News Channel and cable TV operators threaten to shut down the news

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசியபோதிலும், கலைந்து செல்லாத கூட்டத்தினர், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தே சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள், அலுவலக முகப்பில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.   

News Channel and cable TV operators threaten to shut down the news

தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருந்ததாலும், வன்முறை சம்பவம் அதிகரித்ததாலும் கலவரமாக மாறியது. இந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர நடத்தப்பட்ட நடந்த துப்பாக்கி சூட்டில், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  பலர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து, தொடர்ந்து நடக்கும் ஸ்டெரிலைட் தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பக் கூடாது என செய்தித் தொலைக்காட்சிகளுக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது. இதனையடுத்து, அரசு கேபிளில் ஸ்டெர்லைட் போராட்டங்களை நேரடியாக ஒளிபரப்பிய சன் நியூஸ், நியூஸ் 18, நியூஸ் 7, கேப்டன் நியூஸ், கலைஞர் செய்திகள் தற்க்காலிகமாக முடக்கப்பட்டது.

News Channel and cable TV operators threaten to shut down the news

இதனையடுத்து, தொடர்ந்து துத்துக்குடி போராட்டத்தை படம்பிடித்துவந்ததை நேரடியாக சமூகவலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியுபில் நேரடியாக ஒலிபரப்பு செய்தனர். தொடர்ந்து காலையிலிருந்து நொடிக்கு நொடி செய்தி தொலைகாட்சிகள் உடனுக்குடன் ஒளிபரப்பி இந்திய அளவில் ஸ்டெர்லைட் போராட்டம் டுவிட்டரில் முதலிடத்தில் கொண்டுவந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios